Enable Javscript for better performance
பெங்களூருவில் பிளாஸ்டிக்  உபயோகத்தைத் தடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூருவில் பிளாஸ்டிக்  உபயோகத்தைத் தடுக்க வலியுறுத்தல்

    By  பெங்களூரு,  |   Published on : 28th January 2015 02:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு மாநகராட்சியில் பிளாஸ்டிக் உபயோகத்தைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
     பெங்களூரு மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் குழுத் தலைவர் மஞ்சுநாத் ரெட்டி பேசியது:
     பெங்களூருவில் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால், மாநகரில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கர்நாடத்தில் சிக்மகளூருவில் பிளாஸ்டிக் உபயோகம் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, பெங்களூருவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     மஜத கட்சி தலைவர் ஆர்.பிரகாஷ் பேசியது:
     பெங்களூருவில் குப்பை பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     முன்னதாக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சரோஜினி மகிஷி, கேலி சித்திர ஓவியர் ஆர்.கே.லட்சுமணன் உள்ளிட்டோருக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai