Enable Javscript for better performance
விளம்பரத் தட்டிகள் வைப்பதில் விதிமீறல்:  நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    விளம்பரத் தட்டிகள் வைப்பதில் விதிமீறல்:  நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

    By  பெங்களூரு,  |   Published on : 28th January 2015 02:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி விளம்பரத் தட்டிகள் வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாமன்ற உறுப்பினர் பத்மநாப ரெட்டி வலியுறுத்தினார்.
     பெங்களூரு மாநகராட்சியில் மேயர் சாந்தகுமாரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அவர் பேசியது:
     பெங்களூரு மாநகராட்சியில் விதிமுறைகளை மீறி பல இடங்களில் விளம்பரத் தட்டிகள், பாதாதைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுகுறித்து மாமன்றத்திற்கு அதிகாரிகள் தவறானத் தகவல்களை அளித்துள்ளனர்.
     இதனால் மாநகராட்சிக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
     எனவே, விதிமுறைகளை மீறி விளம்பர தட்டிகள் வைப்பதைத் தடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறி விளம்பரத் தட்டிகள் அமைக்க அனுமதியளிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     இதுகுறித்து இன்னும் ஒரு மாதத்தில் அறிக்கைத் தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai