Enable Javscript for better performance
கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்: எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்: எடியூரப்பா

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று, அந்த மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.

    பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக வியாழக்கிழமை பதவியேற்று அவர் பேசியது:

    காங்கிரஸின் ஆட்சியில் கர்நாடகம் வளம் பெறவில்லை. பல்வேறு முறைகேடுகளில் சிக்கி மூழ்கும் படகாகியுள்ளது. இதனால், அந்தக் கட்சி விரைவில் காணாமல் போகும் சூழல் கர்நாடகத்தில் உருவாகியுள்ளது.

    எனது தலைமையில் பாஜகவைப் பலப்படுத்தி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 150 உறுப்பினர்களுக்கு மேல் வெற்றி பெற்று, கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் கனவான காங்கிரஸ் அல்லாத மாநிலமாக கர்நாடகத்தை மாற்றுவோம். இதற்காக பாஜகவினர் அனைவரும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனந்த்குமார், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா, பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விதான செளதாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியது:

    முதல்வர் சித்தராமையாவின் மகனுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி ஒப்பந்தப்புள்ளி வழங்குவதில் உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து பாஜக சட்டப் போராட்டத்தில் ஈடுபடும்.

    இதுகுறித்து கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai