Enable Javscript for better performance
கர்நாடக பொது நுழைவுத் தேர்வு: மாதிரி ஓஎம்ஆர் விடைத்தாள் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக பொது நுழைவுத் தேர்வு: மாதிரி ஓஎம்ஆர் விடைத்தாள் வெளியீடு

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக பொது நுழைவுத் தேர்வுக்கான ஒளியூடு மதிப்பெண் கணிப்பான் (o‌p‌t‌i​c​a‌l​ ‌ma‌r‌k​ ‌r‌e​a‌d‌i‌n‌g-​OMR) மாதிரி விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், இந்திய மருத்துவம், கட்டடக்கலை, வேளாண்மை உள்ளிட்ட தொழில் கல்வி பாடப் பிரிவுகள் உள்ள கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டில் சேர்ந்து படிப்பதற்கு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக கர்நாடக தேர்வு ஆணையத்தின் சார்பில் வருகிற மே 4,5 ஆகிய தேதிகளில் பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்தத் தேர்வில் விடைகளை ஒளியூடு மதிப்பெண் கணிப்பான் (o‌p‌t‌i​c​a‌l​ ‌ma‌r‌k​ ‌r‌e​a‌d‌i‌n‌g-​OMR) விடைத்தாளில்தான் பதிவு செய்ய வேண்டும். இந்த விடைத்தாளை நிரப்புவது, கையாள்வது குறித்த வழிகாட்டுதல்கள், பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஓஎம்ஆர் மாதிரி விடைத்தாள் h‌t‌t‌p:​‌k‌ea.‌ka‌r.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai