Enable Javscript for better performance
காங்கிரஸின் சூழ்ச்சியால்தான் அம்பேத்கர் மதம் மாறினார்- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸின் சூழ்ச்சியால்தான் அம்பேத்கர் மதம் மாறினார்

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸின் சூழ்ச்சியால்தான் அம்பேத்கர் மதம் மாறினார் என்று, முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தெரிவித்தார்.

    பெங்களூரில் உள்ள மஜத அலுவலகத்தில் வியாழக்கிழமை அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் விழா, பாபு ஜெகஜீவன் ராமின் 109-ஆவது பிறந்த நாள் விழாவில் அவர் பேசியது:

    அண்ணல் அம்பேத்கருக்கும், பாபு ஜெகஜீவன்ராமிற்கும், காங்கிரஸ் கட்சி உரிய மரியாதை, கெளரவத்தை அளிக்கவில்லை. ஆனால் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் ஆதரவும், ஊக்கமும் அளித்தனர்.

    தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்காகப் பாடுபட்ட அம்பேத்கர், காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியால் புத்த மதத்திற்கு மாறினார்.  காங்கிரஸ் கட்சி அவருக்கு உரிய மரியாதை அளித்திருந்தால், அவர் ஒருபோதும் மதம் மாறி இருக்க மாட்டார்.

     காங்கிரஸார் ஒருபோதும் தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஹேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai