Enable Javscript for better performance
தூர்தர்ஷன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் பணியாற்ற பகுதிநேர செய்தியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து தூர்தர்ஷன் பெங்களூரு தொலைக்காட்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தூர்தர்ஷன் பெங்களூரு தொலைக்காட்சி நிலையத்தின் மண்டல செய்திப் பிரிவில் மாநிலத்தின் 30 மாவட்டத் தலைநகரங்களில் பகுதிநேர செய்தியாளர்களாகப் பணியாற்ற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    காணொலிக் காட்சிகளை படமாக்குவதிலும், செய்திகளைத் தொகுப்பதிலும் முன் அனுபவம், ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் மே 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை செலுத்தலாம்.

    விண்ணப்பப் படிவங்கள் மற்றும் நிபந்தனைகளை w‌w‌w.‌d‌d​c‌h​a‌n‌d​a‌na.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai