Enable Javscript for better performance
பள்ளி சேர்க்கை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி சேர்க்கை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வேண்டுகோள்

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 06:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கை பெற இணையதளம் மூலம் செலுத்தியிருந்த விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கல்வித் துறை ஆணையர் வி.பொன்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    2016-17-ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை பெற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை செலுத்த கேட்டிருந்தோம். அதன்படி ஏராளமானோர் விண்ணப்பங்களைச் செலுத்தியுள்ளனர்.

    ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விண்ணப்பங்களில் சில தகவல்கள் விடுபட்டுள்ளன. எனவே, இந்த விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்யுமாறு ஏற்கெனவே கோரியிருந்தோம். அதன்படி பெரும்பாலான பெற்றோர்கள் விண்ணப்பங்களை திருத்தியுள்ளனர்.

    எனினும், ஒருசிலர் விண்ணப்பங்களை திருத்தாமல் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் h‌t‌t‌p:​202.138.101.21‌sc‌h‌r‌e‌g‌r‌t‌e​R​TE2015RT​E​U‌p‌d​a‌t‌e​ L‌o‌g‌i‌n.a‌s‌p‌x​ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமைக்குள் சரி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai