Enable Javscript for better performance
பியூசி விடைத்தாள் திருத்தும் பணி: கல்வித் துறை உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பியூசி விடைத்தாள் திருத்தும் பணி: கல்வித் துறை உத்தரவு

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-ஆம் ஆண்டு பியூசி விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஏப்.16-ஆம் தேதி முதல் வருகை தருமாறு துணை தலைமைத் தேர்வர்கள், உதவி தேர்வர்களுக்கு பியூ கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்ட உத்தரவு:

    2015-16-ஆம் கல்வியாண்டுக்கான 2-ஆம் ஆண்டு பியூசி வேதியியல் பாட மறு தேர்வு ஏப்.12-ஆம் தேதி நடைபெற்றது. எனவே, வேதியியல் பாட விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.16-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.  இதற்காக நியமிக்கப்பட்டுள்ள துணை தலைமைத் தேர்வர்கள் வரும் 16-ஆம் தேதியும், ஏப்.18-ஆம் தேதி முதல் உதவி தேர்வர்களும் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai