Enable Javscript for better performance
பியூசி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கும்: அமைச்சர் கிம்மனே ரத்னாகர்- Dinamani

சுடச்சுட

    

    பியூசி விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கும்: அமைச்சர் கிம்மனே ரத்னாகர்

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பியூசி விடைத்தாள் திருத்தும் பணி வெள்ளிக்கிழமை (ஏப்.15) தொடங்கும் என்று கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.

    இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    பியூசி விடைத்தாள் திருத்தும் விரிவுரையாளர்களுக்கு கூடுதல்படி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் விரிவுரையாளர்கள் ஈடுபட வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விரிவுரையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற வழிவகை செய்யப்படும். ஏப்.31-ஆம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையும். மே 2-ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பியூசி விரிவுரையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai