Enable Javscript for better performance
பெங்களூரு-புதுச்சேரி இடையே விமான சேவை- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு-புதுச்சேரி இடையே ஏப்.25-ஆம் தேதி முதல் விமானசேவை தொடங்க ஏர் பெகாசஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சைசன் தாமஸ் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    தென் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை ஏர் பெகாசஸ் நிறுவனம் வெற்றிகரமாக இயக்கிவருகிறது. கடந்தாண்டு பெங்களூரிலிருந்து ஹுப்பள்ளி, மங்களூரு, மதுரை, சென்னை, திருவனந்தபுரம், கடப்பா உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவையை அறிமுகப்படுத்தினோம்.

    நிகழாண்டில் விஜயவாடா, கொச்சின், புதுச்சேரி, கோவாவுக்கு விமான சேவையை தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ஏப். 25-ஆம் தேதி முதல் பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளோம்.

    கட்டணமாக ரூ. 1,234 நிர்ணயித்துள்ளோம். கடந்தாண்டு எங்கள் விமானங்களில் 2.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நிகழாண்டில் இதனை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

    மேலும் 100 கோடி முதலீடு செய்து, 5 புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளோம். நடுத்தர மக்களை குறைந்த கட்டணத்தில் அதிக அளவில் விமானத்தில் பயணம் செய்ய ஊக்குவிக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் இயக்குநர் அஷ்வின் தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai