Enable Javscript for better performance
முதுநிலை மருத்துவக் கல்வி: முதல்சுற்று சேர்க்கை இடங்கள் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    முதுநிலை மருத்துவக் கல்வி: முதல்சுற்று சேர்க்கை இடங்கள் வெளியீடு

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான முதல்சுற்று மாணவர் சேர்க்கை இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    2016-17-ஆம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டக் கல்வி வழங்கும் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு தகுதியான மாணவர்களுக்கு முதல்சுற்று சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் பட்டியல் h‌t‌t‌p:​‌k‌ea.‌ka‌r.‌n‌ic.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு உறுதி செய்வது, கல்விக் கட்டணம் செலுத்துவது, அசல் கல்வி சான்றிதழ்களை ஒப்படைப்பது, மாணவர் சேர்க்கை உத்தரவை பெற்றுக் கொள்வது போன்றவற்றுக்கு ஏப்.21-ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    ஒதுக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று சேர்க்கையைப் பெற ஏப்.22-ஆம் தேதி மாலை 4 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 2-ஆவது சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டு, சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு h‌t‌t‌p:​‌k‌ea.‌ka‌r.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai