Enable Javscript for better performance
வறட்சி குறித்த ஆய்வு: 4 அமைச்சரவை துணைக் குழுக்கள் அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வறட்சி குறித்த ஆய்வு: 4 அமைச்சரவை துணைக் குழுக்கள் அமைப்பு

    By பெங்களூரு  |   Published on : 15th April 2016 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் வறட்சி நிலையை ஆய்வு செய்ய 4 அமைச்சரவை துணைக் குழுக்களை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் அரவிந்த் ஜாதவ் பிறப்பித்துள்ள உத்தரவு: மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு வறட்சி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து மாநில அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய 4 வருவாய் மண்டல வாரியாக 4 அமைச்சரவை துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தக் குழுக்கள் ஏப்.15 முதல் 30-ஆம் தேதி வரை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அவசியம் ஏற்பட்டால் அங்குள்ள மக்கள், அதிகாரிகளைச் சந்தித்து கருத்தறிந்து அறிக்கையைத் தயாரித்து அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    வருவாய் மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை துணைக் குழுக்கள்:

    பெங்களூரு மண்டலம்- வருவாய்த் துறை அமைச்சர் சீனிவாஸ் பிரசாத், மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் ஆர்.ரோஷன் பெய்க்.

    கலபுர்கி மண்டலம்-ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், உள்ளாட்சித் துறை அமைச்சர் கமருல் இஸ்லாம், கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் உமாஸ்ரீ, மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல்.

    பெலகாவி மண்டலம்-தொழில் துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல், சிறு தொழில்துறை அமைச்சர் சதீஷ்ஜார்கி ஹோளி, வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெளடா.

    மைசூரு மண்டலம்-உயர் கல்வித் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, பொதுப் பணித் துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா, கூட்டுறவுத் துறை அமைச்சர் எச்.எஸ்.மகாதேவ பிரசாத், உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்.

    வறட்சி நிலையை ஆய்வு செய்வதற்காக மண்டல, மாவட்ட அளவில் ஆய்வுக் கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்து, தேவையான தகவல்களை வழங்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட மண்டல ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai