Enable Javscript for better performance
விஜயா வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு- Dinamani

சுடச்சுட

    

    விஜயா வங்கியின் வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விஜயா வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    விஜயா வங்கியின் கால வைப்புத்தொகை மீதான வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வீதம் குறைத்துள்ளது. நாடு முழுவதும் குறுகியகால வட்டி விகிதம்சார் கடன் வழங்கல் விகித முறை (Ma‌r‌g‌i‌n​a‌l​ C‌o‌s‌t​ ‌o‌f​ F‌u‌n‌d‌s​ ba‌s‌e‌d​ L‌e‌n‌d‌i‌n‌g​ Ra‌t‌e-​MC​LR) ஏப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதால், வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    91 நாள்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான காலக் கட்டத்திற்கு வைப்புத்தொகை வைத்துள்ளவற்றுக்கு இந்த புதிய வட்டிவிகிதம் பொருந்தும். புதிய வட்டி விகிதம் ஏப்.12-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஓராண்டில் முதிர்ச்சி அடையும் வைப்புத் தொகைக்கு தற்போது வங்கி 7.50 சதம் வட்டி வழங்கி வருகிறது.

    இந்தியாவின் முன்னணி வங்கியாக விளங்கும் விஜயா வங்கி, இந்தியா மற்றும் கர்நாடக பொருளாதார வளர்ச்சியில் கடந்த 80 ஆண்டுகளாக முக்கியப் பங்காற்றி வந்துள்ளது. நாடு முழுவதும் வங்கிக்கு 1,863 கிளைகளும், 1,651 ஏடிஎம் மையங்களும், 1.4 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

    2016,மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.2,16,000 கோடியாக இருந்தது. இந்தியாவின் வளர்ச்சிசார் பொருளாதாரத்தில் விஜயா வங்கி தொடர்ந்து முக்கியப் பங்காற்றும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai