Enable Javscript for better performance
ஸ்ரீராம நவமி: இன்று இறைச்சி விற்கத் தடை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீராம நவமியை முன்னிட்டு பெங்களூரில் இறைச்சி விற்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட உத்தரவு:

    கர்நாடகத்தில் ஏப்.15-ஆம் தேதி ஸ்ரீராம நவமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விலங்குகள் வதைத் தடைச் சட்டத்தின் கீழ், பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஏப்.15-ஆம் தேதி விலங்குகளைத் துன்புறுத்தவும், அதன் இறைச்சியை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இறைச்சி விற்க விதித்துள்ள தடையை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai