Enable Javscript for better performance
அரசு அதிகாரிகள், ஆசிரியர் வீடுகளில் ஊழல் தடுப்புப் படையினர் சோதனை: பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள- Dinamani

சுடச்சுட

    

    அரசு அதிகாரிகள், ஆசிரியர் வீடுகளில் ஊழல் தடுப்புப் படையினர் சோதனை: பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல்

    By பெங்களூரு  |   Published on : 23rd December 2016 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக கிடைத்த தகவலின் பேரில், பெங்களூரு, பல்லாரி உள்பட மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்களின் வீடுகளில் ஊழல் தடுப்புப் படையினர் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
     பெங்களூரு மாநகராட்சி திட்டப் பிரிவு உதவி இயக்குநர் பசவராஜ், வரி வசூல் அதிகாரி வினய்குமார், சித்தரதுர்கா மாவட்ட பொதுப் பணித் துறை பொறியாளர் எச்.எல்.புட்டலிங்கய்யா, தாவணகெரேயில் ஊரக வளர்ச்சித் துறை உதவிப் பொறியாளர் உமேஷ்பட்டேல், தென்கன்னட மாவட்டம், பெலதங்கடி வட்டாட்சியர் அலுவலகக் கண்காணிப்பாளர் கோவிந்த்நாயக், பல்லாரி மாவட்ட மருத்துவமனை பயிற்சி மைய அதிகாரி பம்பாவதி, சாம்ராஜ்நகர் உப்பரா லேஅவுட் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ரேசண்ணா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை
     நடத்தப்பட்டது.
     இதில் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
     இவர்கள் அனைவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai