Enable Javscript for better performance
போதையேற்றும் மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை: - Dinamani

சுடச்சுட

    

    போதையேற்றும் மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் எச்சரித்தார்.

    பெங்களூரில் சனிக்கிழமை மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் பொன்விழாவைத் தொடக்கி வைத்து அவர் பேசியது: போதையேற்றும் மருந்துகளை யாரும் விற்கக்கூடாது என கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறோம். யாராக இருந்தாலும் சமுதாயத்தை மேம்படுத்த வேண்டுமே அன்றி, சீரழிக்கக் கூடாது.

    போதையேற்றும் மருந்துகளை ஒருசில மருந்து அங்காடிகள் விற்பது வேதனை அளிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும். எனவே, போதையேற்றும் மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதையேற்றும் மருந்தை உள்கொள்வதும் தவறு, அதை விற்பதும் தவறு. இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதன் துர்நாற்றத்தில் இருந்து மதுபானம் குடித்தவர்களை, சிகரெட் அல்லது பீடி புகைத்தவர்களைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், போதையேற்றும் மருந்துகளை உள்கொண்டால் எப்படி கண்டறிவது?

    மருந்து அங்காடிகள், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கக்கூடாது. மருந்துச் சீட்டில்லாமல் மருந்து வழங்கினால், அப்படிப்பட்ட அங்காடிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதையேற்றும் மருந்துகளை உள்கொண்டு இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை மாய்த்துக்கொள்ளக் கூடாது. மருந்து நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும். சட்டப்படியான மருந்துகளை மட்டுமே உற்பத்திசெய்ய வேண்டும் என்றார். விழாவில், மாநில மருந்து கட்டுப்பாட்டாளர் ரகுராம்பண்டாரி, கூடுதல் மருந்து கட்டுப்பாட்டாளர் பி.டி.கானாபுரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai