Enable Javscript for better performance
புத்த பூர்ணிமா: இன்று இறைச்சி விற்க தடை- Dinamani

சுடச்சுட

    

    புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பெங்களூருவில் சனிக்கிழமை இறைச்சி விற்க பெங்களூரு மாநகராட்சி தடைவிதித்துள்ளது.

    இது குறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவு: கர்நாடகத்தில் சனிக்கிழமை (மே 21) புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விலங்குகள் வதை தடைச்சட்டத்தின்கீழ் பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மே 21-ஆம் தேதி விலங்குகளை துன்புறுத்தவும், அதன் இறைச்சியை விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இறைச்சியை விற்க விதித்துள்ள தடையை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai