Enable Javscript for better performance
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு பங்கேற்பு

    By பெங்களூரு,  |   Published on : 28th November 2016 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு பங்கேற்க உள்ளதாக, மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தொழிலாளர் பிரிவு தலைவருமான எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தார்.
     இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தார்.
     இதனால் ஏழைகள் மட்டுமின்றி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளன.
     இதில் காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவு பங்கேற்கும். போராட்டத்தில் தொழிலாளர் அணியினர் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai