Enable Javscript for better performance
"இந்திய வரலாற்றில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மன்னன் திப்புசுல்தான்'- Dinamani

சுடச்சுட

    

    "இந்திய வரலாற்றில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மன்னன் திப்புசுல்தான்'

    By மைசூரு,  |   Published on : 28th November 2016 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய வரலாற்றில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மன்னன் திப்புசுல்தான் என்று கன்னட எழுத்தாளர் பேராசிரியர் கே.எஸ்.பகவான் தெரிவித்தார்.
     மைசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது: இந்திய வரலாற்றில் ஏராளமான மன்னர்களின் வரலாறு காணக் கிடைக்கின்றன. அந்த வரலாறுகளை புரட்டும்போதெல்லாம் ஏற்படாத படபடப்பு ஒருசிலருக்கு ஏற்படுகிறது. திப்புசுல்தான் இந்துக்களுக்கு எதிரானவர். இந்துக்களை கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மதம் மாற்றியவர் என்றெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள். திப்புசுல்தானுக்கு எதிராகக் கூறப்படும் கருத்துகள் அனைத்தும் கற்பிதங்கள், வடிகட்டிய பொய்கள். இந்திய வரலாற்றில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மன்னன் திப்புசுல்தான் மட்டுமே.
     விவசாயிகள், ஏழை எளிய மக்களின் நலனுக்காகப் பாடுபட்டதால்தான் திப்புசுல்தானுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள். திப்புசுல்தான் சார்ந்திருந்த மதம், சமத்துவத்தையும் நீதியையும் போதிக்கிறது. எனவே, இந்துக்களை கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மதம் மாற்றியதாகக் கூறப்படுவதெல்லாம் அப்பட்டமான பொய்யாகும். திப்புசுல்தான் சமத்துவத்தைதான் விரும்பினார்.
     தனது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்களுக்காகவே திப்புசுல்தானை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மலபார், குடகு பகுதிகளில் மத மாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறும் சில மதவாதிகள், அவரது சமஸ்தானத்தக்கு உட்பட்ட பகுதிகளில் ஏன் அப்படி செயல்படவில்லை, அப்படி செய்திருந்தால் அவரது சமஸ்தானத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்க வேண்டும்.
     எனவே, திப்புசுல்தானை மகத்தான மன்னனாக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் லலிதாநாயக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai