Enable Javscript for better performance
அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்வு

    By DIN  |   Published on : 08th October 2016 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு பெல்லந்தூரில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
    பெங்களூரு பெல்லந்தூர் கேட் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டடம் புதன்கிழமை (அக். 5) பிற்பகல் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கட்டடத் தொழிலாளர்கள் 15-க்கும் அதிகமானோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டனர்.
    இவர்களில் 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் அருகில் இருந்த கட்டடத்தின் காவலாளி அசோக் மகந்தா, அடுக்குமாடிக் கட்டடத்தில் பணி செய்து வந்த சமீர், பெண் தொழிலாளி ராதாநாயக், துருவ், சம்ஷோல் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டது.
    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற மீட்புப் பணியில், சலவைக் கல் பதிக்கும் பணி செய்து வந்த கிருஷ்ணா என்பவரின் சடலம் மீட்கபட்டது. அடுக்குமாடிக் குடியிருப்பின் இடுபாடுகளை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்னும் ஒரு சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai