Enable Javscript for better performance
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும்: அமைச்சர் ரோஷன் பெய்க்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும்: அமைச்சர் ரோஷன் பெய்க்

    By DIN  |   Published on : 08th October 2016 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என்று கர்நாடக நகர வளர்ச்சித் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்தார்.
    பெங்களூரு பிரேசர்டவுனில் வியாழக்கிழமை 9 பெண்கள் சேர்ந்து தொடங்கியுள்ள கஃப்டீரிய சிற்றுண்டி, அடுமனையைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
    சர்வதேச அளவில் பல துறைகளில் பெண்கள் அபரிதமான வளர்ச்சியை அடைந்து வருகின்றனர். அதே இந்தியாவிலும், குறிப்பாக கர்நாடகத்திலும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
    அதன் ஒருபகுதியாக 9 பெண்கள் இணைந்து இந்த சிற்றுண்டி, அடுமனையைத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். எந்த ஒரு நாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வளர்ச்சி அடைகின்றனரோ, அந்த நாடே பொருளாதாரத்தில் வல்லரசாக உருவாக முடியும்.
    மகாத்மா காந்தி, நேரு போன்றவர்கள் பெண்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டிருந்தனர். அவர்களின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. அல்கா குரோவர் தலைமையில் பெண்கள் தொடங்கியுள்ள இந்த சுய தொழில் மையத்தை போல வேறு துறைகளில் பெண்கள் தொழில்முனைவோராக வர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
    நிகழ்ச்சியில் கஃப்டீரிய சிற்றுண்டி, அடுமனை நிர்வாகிகள் அல்கா குரோவர், கீதா அஸ்வினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai