Enable Javscript for better performance
அம்மா' திட்ட சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அம்மா' திட்ட சிறப்பு முகாம் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தருமபுரி மாவட்டம், வெள்ளோலை கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
    அப்போது, வெள்ளோலை கிராமத்தில் மட்டும் 225 தனிநபர் கழிப்பறைகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 75 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார்.
    முகாமில், நுகர்வோர் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் பெயர் நீக்கல், சேர்த்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்ட 80 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
    முகாமில், கோட்டாட்சியர் ராமமூர்த்தி, வட்டாட்சியர்கள் சரவணன், மாதவன், வட்ட வழங்கல் அலுவலர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    அரூரில்... அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், புதிய குடும்ப அட்டைகள் கோருதல், குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகள், முதியோர் உதவித் தொகைகள், அரசு நகர் பேருந்து வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான 55 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 35 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது.
    இதில், வட்டாட்சியர் செல்வராஜ், வட்ட வழங்கல் அலுவலர் மு.செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் எஸ்.ரமணி, கிராம நிர்வாக அலுவலர் ஷீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    போச்சம்பள்ளியில்... மத்தூர் அருகேயுள்ள குள்ளம்பட்டி பகுதியில் நடைபெற்றது முகாமுக்கு போச்சம்பள்ளி வட்டாட்சியர் ஆர்.முருகன் வரவேற்றார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஐ.கதிரேசன் தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர் மிருணாளினி, மண்டல துணை வட்டாட்சியர் தெய்வநாயகி, மத்தூர் வருவாய் ஆய்வாளர் எஸ்.ராஜலட்சுமி, போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் ஜி.அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட 32 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 11 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வன், சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மத்தூர் கிராம நிர்வாக அலுவலர் (பொ) கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai