Enable Javscript for better performance
ஓவியக்கலை பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை- Dinamani

சுடச்சுட

    

    ஓவியக்கலை பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    இதுகுறித்து கர்நாடக சித்ரகலா அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    கர்நாடகத்தில் ஓவியக்கலையை மேம்படுத்தும் நோக்கோடு ஓவியக்கலை பயிலும் பொதுப்பிரிவு, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளது. முந்தைய வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். இந்த கல்வி உதவித்தொகையை பெற கர்நாடகத்தில் உள்ள ஏதாவதொரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஓவியக்கலை, காட்சி வரைகலை கல்லூரிகளின் மாணவர்கள், அரசின் அனுமதி பெற்ற குருகுலமுறை கல்வி பயிலும் மாணவர்கள், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பில் ஓவியக்கலை பயின்றுவரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    16 முதல் 25 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதற்கு முன்பு உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது. ஆர்வமுள்ளவர்கள் 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள், 2 படைப்புகளின் நகல்கள், முன்பு உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான உறுதிச் சான்று ஆகியவற்றை அக்.23-ஆம் தேதிக்குள் பதிவாளர், கர்நாடக லலித்கலா அகாதெமி, கன்னட மாளிகை, 2-ஆவது மாடி, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு
     இணையதளத்திலோ அல்லது 080-22480297 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai