Enable Javscript for better performance
சாலை விபத்தில் பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சாலையைக் கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்த பெண் உயிரிழந்தார்.
    பெங்களூரு மகாதேவப்புராவைச் சேர்ந்தவர் பார்வதம்மா (49). வீடுகளில் வேலை செய்து வந்த இவர், வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் மகாதேவப்புரா வெளிவட்டச் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பார்வதம்மா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்ள்ளார். இதுகுறித்து கே.ஆர்.புரம் போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: இளைஞர் சாவு
    நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.
    கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). சமையலரான இவர், வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனது நண்பர்கள் கோபி, நாகேஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.
    தேசிய நெடுஞ்சாலை 75-இல் வடேரஹள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். காயமடைந்த கோபி, நாகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கோலார் ஊரக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai