Enable Javscript for better performance
செல்லிடப்பேசி பழுது நீக்கும் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு ஊரக மாவட்டத்தில் செல்லிடப்பேசி பழுது நீக்கும் பயிற்சி நடைபெறஉள்ளது.
    இதுகுறித்து ருட்செட் தொழில் பயிற்சி மையம் வெளியிட்ட அறிக்கை:
    ருட்செட் தொழில் பயிற்சி மையத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் 4 வாரகால செல்லிடப்பேசி பழுது நீக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி அக்.17-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
    இந்த பயிற்சி காலத்தில் செல்லிடப்பேசி மென்பொருள், வன்பொருள் பழுதுநீக்குதல் போன்றவை
    கற்றுத்தரப்படும்.
    ஸ்மார்ட்போன் உள்ளிட்ட அனைத்து செல்லிடப்பேசிகளின் பழுது நீக்கவும் கற்பிக்கப்படும். வெளியூர் மாணவர்களுக்கு இலவச தங்கு விடுதி வழங்கப்படுகிறது.
    பயிற்சி மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல்கள், கருவிகள் பெட்டி, மென் பொருள்கள் வழங்கப்படும். பயிற்சியில் சேர எஸ்.எஸ்.எல்.சி., பியூசி தேர்ச்சி அல்லது தோல்வி, பட்டயம், வேலைவாய்ப்பு பயிற்சி பெற்றிருத்தல் அவசியம்.
    பயிற்சியில் சேர அக்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai