Enable Javscript for better performance
"தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
    இதுகுறித்து அரூரில் அவர் வெள்ளிக்கிழமை கூறியது: தமிழகத்தில் போதிய பருவ மழை இல்லாததால், கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காததால், விவசாயிகள் தங்களது கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். தண்ணீர் பற்றாக் குறையால் விவசாயப் பணிகளும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
    ஜவ்வரிசியில் கலப்படப் பொருள்கள் கலப்பதை மாநில அரசு தடுக்க வேண்டும். தமிழகத்தில் கள் மீதான தடையை நீக்கி, கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், வரும் 2017 ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai