Enable Javscript for better performance
பியூசி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    2-ஆம் ஆண்டு பியூசி படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    பியூ கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் பியூ கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டில் 2-ஆம் ஆண்டு பியூசி வகுப்பில் படித்து வரும் எஸ்.சி.,எஸ்.டி.வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அக். 23-ஆம் தேதி வரை வட்ட அளவிலான சிறப்பு பயிற்சி முகாம் நடக்கவிருக்கிறது.
    தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (என்இஇடி), பொதுத்தேர்வு உள்ளிட்ட தேசிய அளவிலான அனைத்துத் தேர்வுகளையும் நமது மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையிலும், 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
    முகாமில் ஆங்கிலம், பொருளாதாரம், கணக்கு இயல், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அக்.11, 12, 15 ஆகிய தேதிகள் தவிர, அக்.23-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவிருக்கிறது. சமூகநலத் துறை மாவட்ட அதிகாரிகளிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, மேலும் விவரங்களுக்கு சமூக நலத் துறை அல்லது வட்ட ஒருங்கிணைவு பியூ கல்லூரிகளை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்
    பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai