Enable Javscript for better performance
பெங்களூரு முன்னாள் மேயர்கள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு முன்னாள் மேயர்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மேயர் பத்மாவதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மேயர்கள் பி.ஆர்.ரமேஷ், உச்சப்பா, ராமசந்திரப்பா, எச்.கே.நடராஜ், சத்தியநாரயணா, லக்கண்ணா, புச்சேகெளடா, கே.எச்.என்.சிம்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    பெங்களூரு சர்வதேச நகரமாக உயர்ந்துள்ளது. அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்துதர வேண்டும். மேயர் நிதியை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அதே ஆண்டில் அதற்கான வளர்ச்சிப் பணிகளை செய்து முடிக்க வேண்டும்.
    அதிக அளவில் மாமன்றக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். மாநகராட்சியின் செயல்பாடுகள் கன்னட மொழியிலேயே நடைபெறுவது அவசியம். மேயர் மக்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்.
    சாலை, கழிவுநீர்க் கால்வாய், குப்பைப் பிரச்னைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகரில் சேரும் குப்பையை கொட்ட உரிய இடத்தை அடையாளம் காண வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை மேயர் பத்மாவதி, துணை மேயர் ஆனந்துக்கு முன்னாள் மேயர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai