Enable Javscript for better performance
அரசுப் பள்ளி மாணவிகளின் சீருடையில் மாற்றம்: அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளி மாணவிகளின் சீருடையில் மாற்றம்: அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தத் திட்டம்

    By பெங்களூரு,  |   Published on : 15th October 2016 11:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடுத்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவிகளின் சீருடையில் மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தன்வீர்சேட் தெரிவித்தார்.
     பெங்களூரு விதான செüதாவில் வெள்ளிக்கிழமை ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தன்வீர்சேட் செய்தியாளர்களிடம் கூறியது:
     அடுத்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 8,9,10-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளின் சீருடையில் மாற்றம் செய்யப்படுகிறது.
     சட்டை மற்றும் பாவாடைக்குப் பதிலாக மாணவிகளுக்கு சுடிதார் மற்றும் துப்பட்டா சீருடையாக வழங்கப்படும். மாணவிகளின் நலன் கருதி இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது.
     தற்போதைய நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் 14,589 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
     இதை நிரப்பும் வகையில், 2015-16-ஆம் கல்வியாண்டில் 10 ஆயிரம் ஆசிரியர்கள், 2016-17-ஆம் கல்வியாண்டில் 4 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் சித்தராமையா அனுமதி அளித்துள்ளார். இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
     அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை மேம்படுத்த தொகுப்புப் பள்ளி மையத்தில் சோதனைக் கூடத்தை அமைத்திருக்கிறோம்.
     நிகழ் நிதியாண்டில் மைசூரு, மண்டியா, ராமநகரில் தொகுப்புப்பள்ளி மையத்தில் சோதனைக் கூடத்தை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
     நிர்வாகத்தில் சீர்த்திருத்தம், கல்வியில் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
     பள்ளிக் கல்வித் துறையில் அவசியமில்லாத பதவிகள் நீக்கப்படும். மேலும் அவசியமிருக்கும் பதவிகளுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
     அரசுப் பள்ளிகளை நிகழ் நிதியாண்டில் மூடும் திட்டம் அரசிடம் இல்லை. அரசுப் பள்ளி மாணவர்களின் வருகையை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.
     அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்திற்கு முன்பே, இலவச சீருடை, பாடநூல், ஷூ மற்றும் சாக்ஸ், சைக்கிள்கள் விநியோகிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
     முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai