Enable Javscript for better performance
கன்னட பள்ளிகள் மூடுவதைத் தடுக்க மஜத விழிப்புணர்வுப் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    கன்னட பள்ளிகள் மூடுவதைத் தடுக்க மஜத விழிப்புணர்வுப் பிரசாரம்

    By பெங்களூரு,  |   Published on : 15th October 2016 11:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் கன்னட பள்ளிகளை மூடுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள மஜத முடிவு செய்துள்ளது.
     இதுகுறித்து மஜத மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா, மஜத மாநில துணைத் தலைவர் ஒய்.எஸ்.வி.தத்தா ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
     மாநிலத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு கடிவாளம் போட வேண்டும். அதிகரித்துவரும் தனியார் பள்ளிகளால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து அரசின் கன்னடப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
     நவ. 1-ஆம் தேதிக்குப் பிறகு இலக்கியவாதி, எழுத்தாளர்களுடன் இணைந்து கன்னடப் பள்ளிகளை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட மஜத முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் 3 ஆயிரம் அரசு கன்னடப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அப்பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளது.
     கட்டாயக் கல்வி திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநில அரசு ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் வரை நிதி உதவி செய்வதால், அரசின் கன்னடப் பள்ளிகள் மூடும் நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு அரசின் நடவடிக்கையே முக்கிய காரணம்.
     கன்னடப் பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகளை அதிகரிப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும். பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் குழந்தைகளே தனியார் பள்ளிகளில் கல்வி பயிலுகின்றனர் என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி குறித்து விவாதிக்க 2 நாள்களை ஒதுக்க வேண்டும் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai