Enable Javscript for better performance
"காங்கிரஸிலிருந்து விலகுவது உறுதி'- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸிலிருந்து விலகும் முடிவில் மாற்றமில்லை; பாஜகவில் இணைவது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை என்றார் கர்நாடக முன்னாள் அமைச்சர் சீனிவாஸ் பிரசாத்.
     இதுகுறித்து மைசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
     எனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பிறகே பாஜக அல்லது மஜதவில் சேருவது குறித்து முடிவு செய்ய முடியும். எந்த முடிவையும் அவசரகோலத்தில் எடுக்கமாட்டேன். காங்கிரஸ் கட்சியில் நிலைத்திருக்க யாரும் என்னிடம் சமரசம் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவது என்ற முடிவில் மாற்றமில்லை.
     சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும்போது அங்கு இருக்கக் கூடாது என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கூறியிருப்பதை பின்பற்றுபவன் நான். அதனால்தான் இனி ஒருபோதும் சமரசம் செய்து கொண்டு காங்கிரஸ் கட்சியில் இருக்கமாட்டேன் என்றார்.
     முன்னதாக, மைசூரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கரின் "தம்ம தீட்சை' தின விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், இரு குழந்தை கொள்கையைப் பின்பற்றி, தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயமாக கல்வி வழங்கி, மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து விலகினால் முன்னேற்றம் காணலாம் என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai