Enable Javscript for better performance
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பெங்களூரில் நாளை மாரத்தான் ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பெங்களூரில் நாளை மாரத்தான் ஓட்டம்

    By பெங்களூரு  |   Published on : 15th October 2016 11:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.
     இதுகுறித்து மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஸ்ரீராம் பிராபர்டீஸ் மேலாண் இயக்குநருமான எம்.முரளி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
     பெங்களூரில் திறமை மிகுந்த தடகள வீரர்கள் உள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மாரத்தான் ஓட்டம் அக். 16-ஆம் தேதி நடைபெறகிறது.
     இதில் பங்கேற்க 15 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். பந்தயம் நடைபெறும் நாளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு மாரத்தான் மட்டுமன்றி, அரை மாரத்தான் பந்தயமும், 5 கி.மீட்டர் நம்பிக்கை ஓட்டப்பந்தயமும் நடைபெறும்.
     இதில் கண் பார்வை இழந்த 24 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்கின்றனர். பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 30 லட்சம் வரை பரிசு வழங்கப்படுகிறது என்றார்.
     அர்ஜூனா விருது பெற்ற தடகள வீராங்கனை ரீது அப்ரஹாம் பேசியது:
     பெங்களூரில் தடகள வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை வலியுறுத்தியும் முழு, அரை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பலர் ஆர்வமாக முன்வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
     மாரத்தான் ஓட்டத்திற்கு பெங்களூரு மாநகராட்சி, போலீஸார் ஒத்துழைப்பு அளிக்க முன் வந்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நமது நாட்டு வீரர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளதும், பலர் இறுதி சுற்றுவரை முன்னேறியதும் மகிழ்ச்சியை, தன்னம்பிக்கையை வழங்கியுள்ளது.
     எனவே, இளம் தடகள வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
     நிகழ்ச்சியில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை நிஷாமில்லட், தடகள வீராங்கனை சுதாசிங், மாரத்தான் ஓட்டப்பந்தய இயக்குநர் நாகராஜ் அடிகாஸ், தொழில்நுட்ப இயக்குநர் டாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai