Enable Javscript for better performance
"நம்பிக்கை உள்ளவர்களுக்கு நோயும், ஊனமும் பிரச்னையில்லை'- Dinamani

சுடச்சுட

    

    "நம்பிக்கை உள்ளவர்களுக்கு நோயும், ஊனமும் பிரச்னையில்லை'

    By பெங்களூரு,  |   Published on : 15th October 2016 11:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நம்பிக்கை உள்ளவர்களுக்கு நோயும், ஊனமும் பிரச்னையில்லை என்று நடிகரும், இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் தெரிவித்தார்.
     பெங்களூரில் வெள்ளிக்கிழமை கீல்வாதநோய், மூட்டுமாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியது:
     மனிதர்கள் பிறப்பதும், வாழ்ந்து இறப்பதும் வாடிக்கை. ஒருசிலர் நோய்களால் பாதிக்கப்பட்டு, தங்கள் திறமைகளை மறந்து விடுகின்றனர். கீல்வாதநோய், மூட்டுமாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் எந்தத் துறைகளிலும் தொடர்ந்து ஈடுபடாமல் முடங்கி விடுகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு ஊக்கம் அளிப்பது அவசியம்.
     சகாரா மருத்துவமனையின் முயற்சியால் நவீன மருத்துவத்தில் அனைத்து நோய்களையும் குணமாக்கும் திறன் அதிகரித்துள்ளது. எனவே, எந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் நம்பிக்கை இழக்காமல் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு நோயும், ஊனமும் பெரிய பிரச்னை இல்லை என்றார்.
     நிகழ்ச்சியில் மூட்டுமாற்று அறுவைச் சிகிச்சை வல்லுநர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai