Enable Javscript for better performance
மூளைக் காய்ச்சல் உயிரிழப்புகள்: ஒடிஸா அரசு மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    மூளைக் காய்ச்சல் உயிரிழப்புகள்: ஒடிஸா அரசு மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

    By பெங்களூரு,  |   Published on : 15th October 2016 11:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒடிஸா மாநிலத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 50 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், அந்த நோயைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிஸா மாநில அரசு தவறி விட்டதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டினார்.
     பெங்களூரு அருகே ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மையத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த தர்மேந்திர பிரதான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     மூளைக் காய்ச்சல் நோயைத் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிஸா அரசு தவறிவிட்டது. அதன் காரணமாகவே, ஒடிஸாவின் மல்கான்கிரி மாவட்டத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் 50 குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர்.
     அந்த நோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அனைத்து வகையான உதவிகளையும் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மூளைக் காய்ச்சலைத் தடுக்க முடியும். எனவே, அந்த தொற்றுநோயைத் தடுக்க, மத்திய-மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவோம் என்றார் தர்மேந்திர பிரதான்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai