பெங்களூரில் சதாயூ மருத்துவ மையங்களில் மகளிருக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து சதாயூ மருத்துவக் குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரில் மகளிர் பல்வேறு நோய்கள், எடை அதிகரிப்பு, கருத்தரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். ஜூன் 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை பெங்களூரில் உள்ள அனைத்து சதாயூ மருத்துவ மைங்களிலும், மகளிருக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறகிறது.
இதில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த முகாமில் பெண்கள் பரவலாக கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9590484848 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.