அந்தோணியார் திருவிழா: தோர்ணஹள்ளியில் தாற்காலிகமாக ரயில் நிறுத்தம்

அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு தோர்ணஹள்ளி ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக ரயில்களை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு தோர்ணஹள்ளி ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக ரயில்களை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 ஜூன் 12 முதல் 15-ஆம் தேதி அந்தோணியார் திருவிழா நடப்பதை முன்னிட்டு ரயில் எண்கள்-56270 56269-மைசூரு-சிவமொக்கா-மைசூரு பயணியர் ரயில், ரயில் எண்கள்-56276 56275-மைசூரு-தாளகுப்பா-மைசூரு பயணியர் ரயில் தோர்ணஹள்ளி ரயில் நிலையத்தில் தாற்காலிகமாக நிறுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
 காலை 10.46க்கு வரும் ரயில் எண்-56270-மைசூரு-சிவமொக்கா பயணியர் ரயில், காலை 10.47 மணிக்கு புறப்படும். ரயில் எண்-56269-சிவமொக்கா-மைசூரு பயணியர் ரயில் தினமும் மாலை 3.30 மணிக்கு வந்து மாலை 3.31 மணிக்கும், ரயில் எண்-56276-மைசூரு-தாளகுப்பா பயணியர் ரயில் தினமும் நண்பகல் 1.40 மணிக்கு வந்து நண்பகல் 1.41 மணிக்கும், ரயில் எண்-56275-தாளகுப்பா-மைசூரு பயணியர் ரயில் நண்பகல் 1.05 மணிக்கு வந்து நண்பகல் 1.06 மணிக்கும் புறப்படும்.
 ரயில் எண்கள்-16591,16592-ஹுப்பள்ளி-மைசூரு-ஹுப்பள்ளி ஹம்பி விரைவு ரயில் கினிகெரே ரயில் நிலையத்தில் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து நின்று செல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com