கர்நாடகம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) மூலம் விரைவான மற்றும் செலவில்லாத நீதி கிடைக்க சாதாரண மக்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தேசிய மக்கள் நீதிமன்றங்களை மாதந்தோறும் நடத்தி வழக்குகளைத் தீர்த்துவைக்க முடிவு செய்யப்பட்டது.
நிலுவையில் உள்ள மனுக்கள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத மனுக்கள்(டழ்ங்-கண்ற்ண்ஞ்ஹற்ண்ர்ய் இஹள்ங்ள்) மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
கர்நாடக மாநில சட்ட சேவை ஆணையத்தின் சார்பில் கர்நாடகம் முழுவதும் ஜூன் 10-ஆம் தேதி மோட்டார் வாகன விபத்து இழப்பீடுகள், காப்பீடுகள், வருவாய் வழக்குகள், மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்னைகள், சிறுகுற்றங்கள், வங்கி கடன் நிலுவைகள், கடன் வசூல் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்காக தேசிய மக்கள் நீதிமன்றங்கள் செயல்பட்டன.
மாலை 5 மணி அளவில் நிலுவையில் இருந்த மனுக்கள் 7,726, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத மனுக்கள் 1,453, ஆக மொத்தம் 9,179மனுக்கள் சமரசத்தின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. தீர்த்துவைக்கப்பட்ட வழக்குகளின் பணமதிப்பு ரூ.28,67,55,684 ஆகும்.
மக்கள் நீதிமன்றங்களால் வழக்கமான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதனால், நீதிமன்றங்களில் விரைவான நீதி பரிபாலனம் நடைபெறும்.
அடுத்த மாதாந்திர மக்கள் நீதிமன்றம் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும். அப்போது, சிவில், குற்றவியல் வழக்குகள் குறித்து மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருக்கின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.