முதியவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை: டிஜிபி ஆர்.கே.தத்தா

முதியவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ஆர்.கே.தத்தா தெரிவித்தார்.
Updated on
1 min read

முதியவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ஆர்.கே.தத்தா தெரிவித்தார்.
 பெங்களூரு டிஜிபி அலுவலகத்தில் புதன்கிழமை உலக முதியோர் தாக்குதல் தடுப்பு தினத்தையொட்டி முதியவர்கள் மீதான தாக்குதல் குறித்த அறிக்கையை வெளியிட்டு அவர் பேசியது:
 தேசிய அளவில் உள்ள முதியோர்களில் 44 சதம் பேர் தினந்தோறும் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதனை 22 சதமாக குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
 2 முதியவர்களில் ஒருவர் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. முதுமை, நிதிப் பிரச்னை, நோய் உள்ளிட்டவைகளை பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களை கெüரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 அறிக்கையில் 53 சதம் முதியவர்கள் தங்களை சமூகம் மரியாதையாக நடத்தவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர். முதியோர் மீதான தாக்குதலைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள் என்பதனை மறந்துவிடக் கூடாது. வினை விதைத்தவர்கள் வினையைத்தான் அறுக்க முடியும். எனவே, முதியவர்களை அன்போடு அரவணைத்து செல்வதோடு, மரியாதையாகவும், கெüரவமாகவும் நடத்த இளைய சமுதாயம் முன்வர வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் ஹெல்த் ஏஜ் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷோபாரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com