"ரூ.30 கோடியில் கைநூலாடை விற்பனை மையங்கள்'

ரூ.30 கோடியில் அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தர கைநூலாடை விற்பனை மையங்கள் தொடங்கப்படும் என கர்நாடக கைநூலாடை மற்றும் ஊரகத் தொழில் வாரியத் தலைவர் எலுவனஹள்ளி என்.ரமேஷ் தெரிவித்தார்.
Updated on
1 min read

ரூ.30 கோடியில் அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தர கைநூலாடை விற்பனை மையங்கள் தொடங்கப்படும் என கர்நாடக கைநூலாடை மற்றும் ஊரகத் தொழில் வாரியத் தலைவர் எலுவனஹள்ளி என்.ரமேஷ் தெரிவித்தார்.
 இதுகுறித்து பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் ஒத்துழைப்புடன் கர்நாடகமாநில கைநூலாடை மற்றும் ஊரகத் தொழில் வாரியம் சார்பில் பெங்களூரில் சுதந்திரப் பூங்காவில் ஏப்.24-ஆம் தேதி முதல் கைநூலாடை விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது.
 மே 23-ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் இக்கண்காட்சியில் கர்நாடகத்தைச் சேர்ந்த 115 மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த 85 அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மே 16-ஆம் தேதி வரை ரூ.19.62 கோடியில் கைநூலாடை, ஊரகத்தொழில் பொருள்கள், இதர பொருள்கள் விற்பனையாகியுள்ளன.
 இந்த காலக்கட்டத்தில் 45 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். கைநூலாடை மீது 35 சதம், பட்டு கைநூலாடை மீது 20 சதம், குடிசைத் தொழில் பொருள்கள் மீது 20 சதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மே 23-ஆம் தேதி வரையில் மேலும் 50 லட்சம் வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 கிராமங்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதற்காகவும், மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்குவதற்காகவும் 1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கர்நாடக மாநில கைநூலாடை மற்றும் ஊரகத் தொழில் வாரியம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக கண்காட்சிகளை நடத்தி கைநூலாடை மற்றும் ஊரகத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரை ஊக்கப்படுத்தி வருகிறது.
 கர்நாடகத்தில் 140 கைநூலாடை உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 29,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதேபோல, மாநிலத்தில் 8,600 குடிசைத் தொழில் நிலையங்கள் உள்ளன. இங்கு 70 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
 பெங்களூரு மற்றும் பெலகாவியில் தலா ரூ.10 கோடி செலவில் கைநூலாடை வணிக
 மாளிகைகள் அமைக்கப்படுகின்றன.
 இதற்காக இரு நகரங்களிலும் தலா 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது. மாவட்டத்தில் தலா ரூ.1 கோடியில் நிரந்தர கைநூலாடை விற்பனை மையங்களை திறக்க ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 இதுதவிர, சமூகநலத் துறை ஒத்துழைப்புடன் ரூ.100 கோடியில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை கைநூலாடை உற்பத்தியில் ஈடுபட மானியம் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவில் கைநூலாடை கண்காட்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com