சுடச்சுட

  
  car

  புதிய தொழில்நுட்பங்களுடன் டாடா டிகோர் ஸ்டைல்பேக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தினர் பெங்களூரில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தனர்.

  புதிய காரை அறிமுகப்படுத்தி அந்த நிறுவனத்தின் பயணிகள் வாகன வணிகப் பிரிவு சந்தைப்படுத்தல் தலைவர் விவேக் ஸ்ரீவத்சா கூறியது:
  3 மாதங்களுக்கு முன்பு ஹெக்ஸô, டியாகோ கார்களை அறிமுகம் செய்திருந்தோம். இதைத் தொடர்ந்து தற்போது டாடா டிகோர் ஸ்டைல்பேக் என்ற காரை அறிமுகம் செய்திருக்கிறோம். தற்கால வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு தகுந்தபடி புதிய வகையான கார்களை அறிமுகம் செய்து வருகிறோம்.

  இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு வடிவமைப்பு, என்ஜின், இடவசதி, உட்புற வசதிகள், செயல்திறன் ஆகியவற்றில் புதுமையை புகுத்தியுள்ளோம். டீசல், பெட்ரோல் எரிபொருளை பயன்படுத்தும் 8 வகையான கார்களை அறிமுகம் செய்துள்ளோம். பெட்ரோல் கார் ரூ.4.85 லட்சம், டீசல் கார் ரூ.5.77 லட்சத்தில் விலை தொடங்குகிறது. 650 விற்பனை மையங்களில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai