Enable Javscript for better performance
"வடிவமைப்புத் தொழிலில் இந்தியா முன்னணி'- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச அளவில் வடிவமைப்புத் தொழிலில் இந்தியா முன்னணியில் உள்ளதாக டிசால்ஸ் சிஸ்டம்ஸ் மூத்த இயக்குநர் பி.எம்.ரவிகுமார் தெரிவித்தார்.
     பெங்களூரில் புதன்கிழமை சாலிட் ஒர்க்ஸ்-2018 என்ற வடிவமைப்பு மற்றும் பொறியியல் பயன்பாட்டிற்கான செயலியை அறிமுகம் செய்து அவர் பேசியது: சர்வதேச அளவில் வடிவமைப்பு மற்றும் பொறியியல் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதன் மூலம் பெரும் புரட்சியே ஏற்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.
     வடிவமைப்பு மற்றும் பொறியியல் துறையில் மேலைநாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்தியர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்றார். நிகழ்ச்சியில் அஸ்டேரியா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நீல் மெஹதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai