Enable Javscript for better performance
கன்னட செம்மொழி ஆய்வுக்கு இதுவரை ரூ.7.90 கோடி ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    கன்னட செம்மொழி ஆய்வுப் பணிகளுக்கு இதுவரை ரூ.7.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் உமாஸ்ரீ தெரிவித்தார்.
    கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை மஜத உறுப்பினர் கே.கோபாலையாவின் கேள்விக்குஅமைச்சர் உமாஸ்ரீ எழுத்துமூலமாக அளித்த பதில்: கன்னட மொழிக்கு செம்மொழி தகுதியை மத்திய அரசு 2008-ஆம் ஆண்டில் வழங்கியது. கன்னட செம்மொழி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி கன்னட உச்சநிலை ஆய்வுமையம் அமைக்கப்பட்டுள்ளது.
    கன்னட செம்மொழி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி நேரடியாக இம்மையத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த மையத்துக்கு மாநில அரசு எவ்வித நிதி தொகுப்பையும் விடுவிப்பதில்லை.
    ஆனால், மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி அளித்துவருகிறது.2011 முதல் 2017-ஆம் ஆண்டுவரையில் ரூ.7.90 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. 2011-12-இல் ரூ.54.54 லட்சம், 2012-13-இல் ரூ.2.18கோடி, 2013-14-இல் ரூ.2.18கோடி, 2014-15-இல் ரூ.1கோடி, 2015-16-இல் ரூ.1கோடி,2016-17-இல் ரூ.1கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    கன்னட மொழிக்கு செம்மொழி தகுதி கிடைத்துள்ளது தொடர்பாக தனியாக இயங்கும் மையத்தை தொடங்க அரசு யோசித்துவருகிறது என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai