Enable Javscript for better performance
கர்நாடகத்தில் சமையல் எரிவாயு திட்டம் அமல்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வரின் சமையல் எரிவாயு திட்டம் இம்மாத இறுதியில் அமல்படுத்தப்படும் என உணவு மற்றும் பொதுவழங்கல்துறை அமைச்சர் யூ.டி.காதர் தெரிவித்தார்.
    கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கஜக உறுப்பினர் யூ.பி.பனகர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் யூ.டி.காதர் அளித்த பதில்:
    முதல்வரின் சமையல் எரிவாயு திட்டத்தை அமலாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பொறுப்பு அமைச்சர்களின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த பயனாளிகள் தேர்வுக் குழுவின் உதவியுடன் மாவட்ட வாரியாக இத்திட்டத்தின் முதல்கட்ட பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    இதுகுறித்து தகவல் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்கள் அல்லது அடல்ஜி மக்கள்தோழமை மையங்களுக்குச் சென்று முறையான விண்ணப்பங்களைச் செலுத்த வேண்டும்.
    அதன்பிறகு, இம்மாத இறுதிக்குள் பயனாளிகளுக்கு இலவசமாக சமையல் எரிவாயு உருளை, அடுப்பு உள்ளிட்டவை வழங்கப்படும். மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகள்: பாகல்கோட்-47,564, பெலகாவி-72,711, பெல்லாரி-43,463, பீதர்-51,550, விஜயபுரா-53,567, சாமராஜ்நகர்-14,138, சிக்மகளூரு-22,053, சித்ரதுர்கா-27,808, தென்கன்னடம்-13,046, தாவணகெரே-8,538, தார்வாட்-17,937, கதக்-25,183, கலபுர்கி-57,228, ஹாசன்-38,082, ஹாவேரி-34,489, குடகு-5,311, கோலார்-16,855, கொப்பள்-43,177, மண்டியா-22,161, மைசூரு-6,079, ராய்ச்சூரு=44,792, தும்கூரு-52,555, உடுப்பி-8,874, வட கன்னடம்-34,967, சிக்பளாப்பூர்-30,079, ராமநகரம்-18,283, யாதகிரி-11,174 என அதில் குறிப்பிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai