Enable Javscript for better performance
கித்வாய் புற்றுநோய் மருத்துவமனைக்கு ஸ்கேன் கருவி- Dinamani

சுடச்சுட

    

    கித்வாய் புற்றுநோய் மருத்துவமனைக்கு பிஇடி-சிடி ஸ்கேன் கருவி வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.
    பேரவையில் கேள்விநேரத்தின் போது பாஜக உறுப்பினர் ஒய்.ஏ.நாராயணசாமியின் கேள்விக்கு அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் சார்பில் யு.டி.காதர் அளித்த பதில்: கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள அணுசக்தி மருத்துவப் பிரிவில் புற்றுநோயின் தன்மை, நோயாளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மருந்துகளின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பிரிவில் எலும்பு ஸ்கேன், பிஎஃப்ஆர் ஸ்கேன், ரினோகிராம் ஸ்கேன், ரீனல் ஸ்கேன், இதய ஸ்கேன், தைராய்டு ஸ்கேன், சென்டல்நோட் ஸ்கேன், கல்லீரல் ஸ்கேன், மூளை ஸ்கேன் உள்ளிட்டவற்றை அதிநவீன தொழில்நுட்பக்கருவிகளின் உதவியுடன் தினமும் 50-60 நோயாளிகளுக்கு சோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    இந்த மருத்துவமனைக்கு மாநிலம் தவிர பிறமாநிலங்களில் இருந்தும் அதிக நோயாளிகள் வந்துசெல்வதால், பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. எனினும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
    இங்குள்ள பிஇடி-சிடி ஸ்கேன் மிகவும் நுண்மையான கருவியாகும். புற்றுநோய்க் கட்டிகளின் உயிரியல் மாற்றங்களைக் கண்டறிவதற்கும், நோயின் பாதிப்பை அறிந்துகொள்வதற்கும் உதவியாக இருக்கிறது. இந்தகருவி பழுதடைந்துள்ளது.
    எனவே, அடுத்த நிதியாண்டில் ரூ.15 கோடி செலவில் புதிதாக பிஇடி-சிடி ஸ்கேன் கருவி வாங்கப்படும். உறுப்பினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப வெகுவிரைவில் கருவி வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai