Enable Javscript for better performance
கோயில்கள், மடங்களை அரசுடமையாக்கும் திட்டம் இல்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா- Dinamani

சுடச்சுட

    

    கோயில்கள், மடங்களை அரசுடமையாக்கும் திட்டம் இல்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா

    By DIN  |   Published on : 09th February 2018 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் கோயில்கள், மடங்களை அரசுடமையாக்கும் திட்டம் அரசிடம் இல்லை என அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
    மாநிலத்தில் கோயில்கள், மடங்களை அரசுடமையாக்குவது குறித்து பொதுமக்களின் கருத்தறிய வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்து கர்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்துக்குப் பதிலளித்து முதல்வர் சித்தராமையா பேசியது:
    மடங்கள் மற்றும் கோயில்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் கருத்தறிய வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை கர்நாடக அரசு திரும்பப் பெறுகிறது. இந்து அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களைக் கட்டுப்படுத்துவதே போதுமானது. எதற்காக மடங்கள், கோயில்களைக் கட்டுப்படுத்த வேண்டும்? கோயில்கள், மடங்களை அரசுடமையாக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.
    எதிர்க்கட்சித் தலைவர் கூறியதுபோல, இது அரசின் சுற்றறிக்கை அல்ல, வெறும் அறிவிப்பு அவ்வளவுதான். அந்த அறிவிப்பையும் நாங்கள் திரும்பப் பெறுகிறோம். கோயில்கள், மடங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கம் எதுவும் அரசிடம் இல்லை.
    கோயில்கள், மடங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, அதுகுறித்து ஆராய்வதற்கு மஜத-பாஜக கூட்டணி ஆட்சியின் போது ரமா ஜோய்ஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
    அந்த அறிவிப்பும் மஜத-பாஜக கூட்டணி அரசு காலத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தான் மீண்டும் நாங்கள் வெளியிட்டுள்ளோம். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார்.
    முதல்வர் சித்தராமையாவின் பதில் திருப்தி அளிக்காததால், பாஜக, மஜத உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai