Enable Javscript for better performance
புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க திட்டம்: அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல்- Dinamani

சுடச்சுட

    

    புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க திட்டம்: அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல்

    By DIN  |   Published on : 09th February 2018 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கர்நாடக மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.
    கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தில் மஜத உறுப்பினர் பிள்ள முனிஷாமப்பா எழுப்பிய கேள்விக்கு, மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சரணபிரகாஷ்பாட்டீல் சார்பில் உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சர் யூ.டி.காதர் அளித்த பதில் : மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்பது மாநில அரசின் கொள்கையாகும். அதன்படி,மாநிலத்தின் 16 மாவட்டங்களில் மாநில அரசுக்கு சொந்தமான 16 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மத்திய அரசுக்கு சொந்தமான 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளும் செயலாற்றி வருகின்றன.
    பெங்களூரு ஊரக மாவட்டம், பெங்களூரு நகர மாவட்டத்துடன் ஒன்றியிருப்பதால், மாவட்ட தலைநகர் என்பது பெங்களூராக கருதப்படும். பெங்களூரில் ஏற்கெனவே மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் செயல்பட்டுவருகிறது.
    2016-17-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்திருந்தபடி, பெளரிங் மற்றும் சீமாட்டி கர்சன் மருத்துவமனையில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பெங்களூரு ஊரக மாவட்டத்தில் தற்போதைக்கு மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டமில்லை.
    அடுத்தக்கட்டமாக புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது பெங்களூரு ஊரக மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai