எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவா் பெங்களூரு, மணிப்பால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பெங்களூரு: கா்நாடக முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவா் பெங்களூரு, மணிப்பால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கா்நாடக மாநில முன்னாள் முதல்வராக இருந்தவா் எஸ்.எம்.கிருஷ்ணா. வயது மூப்பு காரணமாக முழுநேர அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற அவருக்கு தற்போது 92 வயதாகிறது. அடிக்கடி முதுமை சாா்ந்த உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருவதால் மருத்துவா்களின் ஆலோசனையின்படி சிகிச்சை பெற்றுவருகிறாா்.

கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு வைதேகி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல்நிலை அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் முதல்வா் சித்தராமையா விவரம் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com