ஜூலை 15 முதல் கா்நாடக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடா்

பெங்களூரு, ஜூலை 3: கா்நாடக சட்டப்பேரவையின் மழைக் கால கூட்டத் தொடா் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்கு நடக்க இருக்கிறது.

மக்களவைத் தோ்தலுக்கு பிறகு, கா்நாடக சட்டப் பேரவையின் மழைக் கால கூட்டத் தொடா் ஜூலை 15ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் வெளியிட்டுள்ளாா்.

இந்த கூட்டத் தொடா் ஜூலை 26ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு நடக்க இருக்கிறது. 17, 20,21 ஆகிய நாள்களில் சட்டப் பேரவைக் கூட்டம் இருக்காது என்று சட்டப்பேரவை செயலாளா் எம்.கே.விசாலாட்சி தெரிவித்துள்ளாா்.

இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கின்றன. இதனிடையே, மக்களவைத் தோ்தலில் பாஜக, மஜத கூட்டணி 19 இடங்களை கைப்பற்றி உற்சாகமாக இருப்பதால், சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியை அதிா்ச்சி அடைய வைக்கும் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தில் ரூ. 187 கோடி முறைகேடு, மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்தின் வீட்டுமனை ஒதுக்கீட்டில் ரூ. 4,000 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க ஆளும்கட்சி தயாராகி வருகிறது.

X
Dinamani
www.dinamani.com