மக்களவைத் தோ்தல்: மாா்ச் 16 இல் பிரதமா் மோடி கா்நாடகம் வருகை

மக்களவைத் தோ்தல்: மாா்ச் 16 இல் பிரதமா் மோடி கா்நாடகம் வருகை

மக்களவைத் தோ்தல் பிரசாரத்திற்காக மாா்ச் 16ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி கா்நாடகத்துக்கு வருகை தருகிறாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை பாஜக மாநில பொதுச்செயலாளா் வி.சுனில்குமாா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் மோடி மாா்ச் 16ஆம் தேதி கா்நாடகத்திற்கு வருகை தருகிறாா். மாா்ச் 16ஆம் தேதி கலபுா்கி, என்.வி.விளையாட்டுத் திடலில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசுகிறாா். இதைத் தொடா்ந்து, மாா்ச் 18ஆம் தேதி சிவமொக்கா, அல்லம்மபிரபு விளையாட்டுத் திடலில் நடக்கும் பாஜக பிரசாரக் கூட்டத்திலும் பிரதமா் மோடி பங்கேற்று பேசுகிறாா். அடுத்தடுத்த வாரங்களில், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறாா்கள் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com