மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2018-19-ஆம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம். விண்ணப்பங்களை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். http://www.schooleducation.kar.nic.in என்ற இணையதளத்தை காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.